AD

இரகசியங்களை வெளியிட்ட சமந்தா

தன்னுடைய பிஸ்னஸ் இரகசியங்களை பத்திரிகையில் வெளியிட்டுள்ளார் நடிகை சமந்தா.

தெலுங்கு ஹீரோவான ராம்சரண் தேஜாவின் மனைவி நடத்தி வரும் பத்திரிகையிலேயே சமந்தா தெரிவித்த விடயங்கள் வெளி வந்துள்ளன.

அதில் தினசரி தான் சாப்பிடும் உணவு என்ன என்பதையும் கூறியிருக்கிறார் சமந்தா. காலையில் முட்டை, அவகோடா பழம், மதியம் மீன், ஆட்டு இறைச்சிக் கறி, தானிய உணவு மாலையில் சர்க்கரைவள்ளி கிழங்கு, முட்டை இரவில் காய்கறிகள், மீன், ஆட்டு இறைச்சிக் கறி ஆகியவற்றை சாப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிடும் சமந்தா, திருமணத்திற்குப் பின்னரும் உடலைக் கச்சிதமாக வைத்திருக்கிறார் எனப் பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

வெஜிடேரியனாக மாறிவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு சமந்தா தெரிவித்தார் என செய்திகள் வந்தன. ஆனால், இப்போது அவர் நான்வெஜ் சாப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார். 


#Samantha_Akkineni, #ramsaran_theja, #tamilcinemaking