AD

விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர முடிவு !!

இப்போவெல்லாம் ரசிகர்களை சந்திக்க நேரில் செல்ல வேண்டியதில்லை சமூக வலைதளைங்களே காணும்.  நடிகர், நடிகைகளுக்கு இந்த சமூக வலைதளைங்களை பயன் படுத்தி கொள்கிறார்கள் இவர்களின் கருத்துக்களை பதிவிட. அதே மாதிரி எதற்கெடுத்தாலும் ட்விட்டரில் பதிவுகள் போட்டு வம்பு வளர்த்துவரும் காதலன் விக்னேஷ் சிவனால் "கொலையுதிர்காலம்"படத்துக்கு வாங்கிய சம்பளத்தைத் திரும்பித் தரவேண்டிய நிலைக்கு  நயன்தாரா தள்ள பட்டுருக்கிறார்.  ரிலீஸுக்குத் தயாராக உள்ள நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ படத்தைக் "கைவிடப்பட்ட படம்" என்று பதிவு போட்டதே இப்பிரச்சினைக்குக் முதல் காரணம் ஆகும்.
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. படம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியபோது குறிப்பான காரணங்கள் எதுவும் சொல்லாமல் படத்தைவிட்டு வெளியேறியுள்ளார் யுவன். அவரும் இசையமைக்கவும் போவதில்லை என்று ட்விட்டரில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.

குழப்பமான இந்நிலையில்தான்  இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்துள்ளது. இந்த விழாவில்தான் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில்  ராதாரவி பேசி இருந்தார்.  இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்துகளில் “இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி. தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே உளறிக்கொட்டினர்’என்று தேவையில்லாத பழைய பஞ்சாயத்துக்களைப் பரப்பி இது ஒரு பிரச்சினைக்குரிய படம் என்பதுபோல சித்தரித்தார்.
விக்னேஷ் சிவனின் இந்த பதிவால், 'கொலையுதிர் காலம்' படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்தது. ஏனென்றால், ’கைவிடப்பட்ட படம்’ என்று குறிப்பிட்டார் விக்னேஷ் சிவன்.  கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிடலாம் என்று வியாபாரப் பேச்சை படக்குழு  தொடங்கியிருந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் கருத்துகளை முன்வைத்து, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு முன் வாங்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்த பலரும் தற்போது வேண்டாம் என்று விலகிவிட்டார்கள். மேலும், படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்க முடிவெடுத்தது. தற்போது அந்நிறுவனமும் ஓடி ஒளிந்து கொண்டது.
விக்னேஷ் சிவனின் கருத்துகளால் படத்தின் முழு வியாபாரமும் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர் மீது வழக்கு தொடர இயக்குநர் சக்ரி டோலட்டி முடிவு செய்துள்ளார். அவரது ட்வீட்டால் ஏற்பட்ட நஷ்டத்தை அவரே அளிக்க வேண்டும் அல்லது படத்துக்காக நயன்தாரா வாங்கிய மொத்த சம்பளத்தையும் நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கவிருக்கிறதாம்.

 #kollywood #kolaiyuthir kaalam #issue #nayanthara #vignesh shivan #yuvan #radharavi #tamilcinemaking