AD

தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா ட்ராப்பானதா?


நடிகர் தனுஷிற்கு மிகுந்த ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் அனைத்து படங்களிலும் இவர் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். மேலும், இவர் நடித்த படங்களில் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஈர்த்த படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.

இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பல ஆண்டுகளாக இழுப்பில் வைத்திருந்தார். படத்தின் பாடல்கள் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. ரசிகர்கள் மத்தியில் பாடல்கள் வெளியான போது மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஆனால் தற்போது படத்தையே ரசிகர்கள் மறந்துவிட்டார்கள்.


திடிரென்று படத்தை தயாரிப்பாளர் ட்ரோப் செய்ததாக பேசப்பட்டது. இது குறித்து நேரடியாக தயாரிப்பாளரிடம் கேட்ட போது தான் உண்மை தெரியவந்துள்ளது. தயாரிப்பாளர் ராஜராஜன் பேசுகையில், படம் ட்ரோப்பானது என்று கூறப்படும் செய்தி முற்றிலும் தவறு. மே மாதத்தில் நிச்சயம் படம் வெளியாகும் என்று கூறினார். மேலும் படம் குறித்த சிறப்பான அப்டேட் கூடிய விரைவில் வரும் என்றும் கூறினார்.