AD

பொது இடத்தில் நடிகையின் ஷூ லேஸை கட்டிவிட்ட கணவர்


அண்மைக்காலமாக சோனம் கபூர்  தனது கணவரான ஆனந்த் அஹுஜாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில்  வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் டெல்லியில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் சோனம் கபூர் தனது கணவருடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சோனம்  கபூர் மற்றும் ஆனந்த் ஆகியோர் ஒரே மாதிரியான ஷூ அணிந்து வந்திருந்தனர்.

அப்பொழுது  சோனம் கபூரின் ஷூ லேஸை ஆனந்த் கட்டிவிட்டார். நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் பொது இடத்தில்  ஆனந்த் செய்த காரியத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.ஆனந்த் சோனமின் ஷூ லேஸை கட்டிவிட்டபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.