AD

தாயாகும் சுஜா வாழ்வில் இப்படி ஒரு சோகமா?


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-ல் பங்குகொண்டவர் தான் சுஜா. இவர் நிகழ்ச்சியின் பாதியில் தான் வீட்டிற்குள் சென்றார். இவரது குணம் மக்களுக்கு மிகவும் பிடிக்க காரணம் இவர் ஓவியா போல் நடந்துகொண்டார்.

ஆனால் ஓவியாவோடு ஒப்பிட்டால் இவருக்கு பிடிக்காது. இவருக்கும் ஷிவ் குமாருக்கும் அண்மையில் தான் திருமணம் நடந்தது. ஷிவ் குமார், நடிகர் பிரபுவின் அண்ணன் ராம் குமாரின் மகனும் சிவாஜி கணேசனின் பேரனும் ஆவர். ஆனால் சுஜா மற்றும் ஷிவ் குமார் திருமணத்திற்கு ராம்குமார் மற்றும் பிரபு குடும்பம் வந்து கலந்துகொள்ளவே இல்லை.

இப்போது வரை ராம்குமார் சுஜாவை மருமகளாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது சுஜா தாயாக போகிறார் என்ற செய்தியை அவரும், அவரது கணவரும் சமூக வலைத்தளங்களில் உறுதிசெய்துள்ளார்கள். இந்த நிலையில் சுஜாவை ராம் குமார் குடும்பம் ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்வி குறியாக தான் இருக்கிறது.