AD

சமந்தா கணவரின் அதிரடி வீடியோ! காரணம் உள்ளே?


சமீபத்தில் தான் சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து சமந்தா மற்றும் அவரது கணவர் நாகசைதன்யா இணைந்து நடித்த மஜிலி திரைப்படம் அண்மையில் வெளியானது. படத்தில் இருவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள் என்று படத்தை பார்த்த ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மஜிலி படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நாகசைதன்யா ஒரு வீடியோவை வெளியிட்டு அந்த வீடியோவில் கூறியதாவது: யாராவது மஜிலி படத்தின் பைரசி விடியோவை பார்த்தால், இந்த தொலைபேசி எண்ணிற்கு (89786 50014) வாட்ஸ் ஆப் மூலம் தகவல் சொல்லுங்கள். பைரசி வீடியோக்களுக்கு தயவு செய்து ஆதரவு கொடுக்காதீர்கள். இவ்வாறு பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், நாக சைதன்யாவிற்கு பதில் கொடுக்கும் வகையில் பைரசி விடியோக்களின் லிங்க்குகளை பகிர்ந்து வருகிறார்கள்.