AD

ஜெயலலிதாவின் வாழ்கை தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!


தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை கொடுத்த இயக்குனர். மேலும், இவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பல நடிகர் நடிகைகள் ஆசை படுவார்கள்.காரணம் இவரது படங்களில் அனைத்து கதாபாத்திரத்தில் நடிப்பவர்களையும் அழகாக காட்டுவார்.

இவரது தயாரிப்பில் கடைசி 9 வருடங்களில் வெறும் 4 படங்களே வெளியாகியுள்ளது. இவரது இயக்கத்தில் தொடங்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என இரு படங்களும் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த படங்களின் வேலைகளை பாதியில் விட்டுவிட்டு தற்போது ஜெயலலிதாவின் வாழ்கையை நாடகமாக எடுக்க இறங்கியுள்ளார் இயக்குனர்.


இந்த வெப் சீரிஸ்சில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார. இந்த சீரியஸ்சின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டதாம். மேலும் ஆகஸ்ட் 15ம் தேதி இதன் முதல் எபிசொட் இணையத்தில் வெளியாகும் என்று கூறியுள்ளார் இயக்குனர். தற்போது பல நடிகைகளும் இவ்வாறான வெப் சீரிஸ்சில் தான் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.