AD

தர்பார் சர்ச்சைக்கு - பதிலடி கொடுத்த டிசைனர்...!!!

சூப்பர்ஸ்டார் ரஜினி தற்பொழுது நடித்து கொண்டிருக்கும் படம்தான் தர்பார். அந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளி வந்தது. அந்த படத்தின் போஸ்டரை பார்த்து காப்பி என்று சர்ச்சையம் கிளம்பியது. காப்பி என்று சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்குமாறு, தன் ஃபேஸ்புக் பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளார் டிசைனர் வின்சிராஜ்

ஹாலிவுட் படமான 'Killing Gunther' போஸ்டரின் அப்பட்டமான காப்பி என்று கருத்து தெரிவித்தனர். மேலும் இரண்டு போஸ்டர்களை ஒப்பிட்டு செய்திகளையும் வெளியிட்டனர்.
இதற்கு எவ்வித விளக்கமும் கொடுக்காமல், 'தர்பார்' போஸ்டர் வடிவமைப்பாளரான வின்சிராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலமே, 'தர்பார்' போஸ்டரை எப்படி வடிவமைத்தார் என்பது தெளிவாக தெரிகிறது.
மூன்று முகம்' கண்ணாடி போட்ட ரஜினியுடன் சேர்த்து, அபாயம் லோகோ வடிவமைப்புடன் இணைந்து இப்போஸ்டரை வடிவமைத்திருக்கிறார் என்பது வின்சிராஜ் வெளியிட்ட புகைப்படம் மூலம் உணர்த்தியுள்ளார். சர்ச்சையை கிளிப்பிவிட்டவர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

#Darbar #Posterissue #Rajini #SuperStar #Tamilcinemaking #ARMurugadoss #Vinciraj