AD

விஜய் சேதுபதியின் சிந்துபாத் புதிய போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி


தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பேட்ட படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து. சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு திருநங்கைகள் மத்தியில் நிறைய சர்ச்சைகள் கிளம்பினாலும் படத்தின் ஆதரவு குறையவில்லை. மேலும், தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகவுள்ள படம் சிந்துபாத்.

இந்த படத்தின் விஜய் சேதுபதியுடன் அவரது மகன் சூரிய விஜய் சேதுபதி, அஞ்சலி, லிங்கா மற்றும் விவேக் பிரசன்னா என நிறைய பிரபலன்கள் நடித்துள்ளார்கள். படம் மே 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த அக்ஷன் திரைப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா சேதுபதி ஓட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளது.


போஸ்ட்டரிற்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் இதை பற்றி தான் பேசி வருகிறார்கள். இந்த படத்தை அருண்குமார் இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.