AD

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போஸ்டர் இதோ


தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் பெரிய இடத்தை பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உண்டு. படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்போது படம் தயாரிக்க தொடங்கிவிட்டார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் இவர் தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் இறுதியாக ரிலீஸ் ஆனா திரைப்படம் தான் காண.

இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது சிவ கார்த்திகேயன் தயாரித்து வரும் படம் தான் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. இந்த படத்தில் ரியோ தான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் 1st லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ட்விட்டரில் தற்போதைய ட்ரெண்டிங் இந்த போஸ்டர் தான். படத்தை பொறுத்த வரை அரசியல் காமெடி படமாக இருக்கும் என்பது போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது.




#nenjamundunermaiunduoduraja #sivakarthikeyan #rio #nanjilsampath #vignesh #skproductions