AD

திருநெல்வேலி ரசிகர்களோடு இணைந்து படம் பார்த்த ஜி. வி. பிரகாஷ்


இசையமைப்பாளராக இருந்த ஜி. வி. பிரகாஷ் மெல்ல மெல்ல கதாநாயகனாக களம் இறங்கி கலக்க தொடங்கிவிட்டார். பல படங்களில் நடித்தாலும் பாலாவின் இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தில் இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. மேலும் தற்போது, ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் வாட்ச்மன்.

இந்த படத்தில் ஜி. வி. ப்ரகாஷுடன் இணைந்து ஒரு நாய்யும் பயணித்திருக்கும். அதற்காகவே பெரிய அளவில் மக்கள் படத்திற்கு வரவேற்பு குடுத்து வருகிறார்கள். இந்த படத்தை எ. எல். விஜய் இயக்கியுள்ளார். படம் 12 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்த நேரத்தில் ஜி. வி. பிரகாஷ் படத்தின் வசூலை அதிகரிக்க ஊர் ஊராக சென்று மக்களோடு இணைந்து படத்தை கண்டு மகிழ்கிறார். அந்த வகையில், ஜி. வி. பிரகாஷ் திருநெல்வேலியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்கும் ஒரு சில வீடியோக்கள் ட்விட்டர் பகிரப்பட்டு வருகிறது. மேலும், சில வீடியோக்களை ஜி. வி. ப்ரகாஷே அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.


#GVPrakash #Watchman #Thirunelveli #ALVijay