AD

நிஷாவின் சீமந்த புகைப்படங்கள் - சந்தோஷத்தைப் பகிர்ந்த கணேஷ்...!!!

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கணேஷ் வெங்கட்ராம். இவர் விஜே மற்றும் சீரியல் நடிகையுமான நிஷாவை 2015-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோலாகலமாகப் பல சர்ப்ரைஸ்களுடன் நடைபெற்றது. தற்போது நிஷாவின் சீமந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்ட கணேஷ், "வெயிட்டிங் ஃபார் குட்டி நிஷா-கணேஷ்"எனப் பதிவிட்டு இருந்தார்.

மேலும், 'எங்களுடைய குடும்பத்தில் புதிய வரவு ஒன்று வர இருக்கின்றது. தந்தையாக என் வாழ்வின் அடுத்தகட்டத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நான் பொறுப்பாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!' எனப் பதிவிட்டிருந்தார். தற்பொழுதான் நிஷாவின் சீமந்தம் நடை பெற்று இருக்கிறது அந்த புகை படங்ககளை இருவருமே தங்களின் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்கள். இதோ அந்த புகைப்படங்கள்!!!!





#BiggBoss  #GaneshVenkatraman, #Tamilcinema #NishaGaneshVenkatraman #Tamilcinemaking