AD

இரண்டு முறை வளைகாப்பு நான் ரொம்ப லக்கி - சின்னத்திரையில் புகழ் நடிகை சந்தோஷி..!!!

நடிகை சந்தோஷி முன்பு சின்னத்திரையில் புகழ்பெற்ற இவர்  தற்போது நடிப்பிலிருந்து சிறிய பிரேக் எடுத்திருக்கிறார். தனக்கு நடந்த சர்ப்ரைஸ் வளைகாப்பு மற்றும் தன் பிசினஸ் குறித்து உற்சாகமாக ஒரு
இணையதளத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.

என் முதல் குழந்தை இப்பதான் 1ம் வகுப்பு போகப் போறாங்க. திரும்பவும் நான் இப்ப கர்ப்பமா இருக்கேன். இப்போ அஞ்சாவது மாதம். என் ஃப்ரெண்ட்ஸ் என்னைப் பார்க்க வருகிறோம்னு சொன்னாங்க..! எனக்கு சர்ப்ரைஸா வளைகாப்பு நடத்தினாங்க.
ரொம்பச் சந்தோஷமாகிட்டேன். இந்த சர்ப்ரைஸ் பிளானில், என் கணவருக்கும் பங்கு இருக்கு. அவரும் என்கிட்ட எதுவும் சொல்லலை. கூடிய சீக்கிரம் என் குடும்பதிலும் வளைகாப்பு நடத்தப்போறாங்க. ஆக, எனக்கு ரெண்டு முறை வளைகாப்பு. நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரிதான்.
எனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகள்லதான் அதிக ஆர்வம். அதுலயே புதுசா தொழில் தொடங்கலாம்னு நினைச்சேன். அப்படித்தான், நாலு வருஷத்துக்கு முன்பு, நானும் என் கணவரும் சேர்ந்து `PLUSH Boutique & Beauty Lounge' கடையை சென்னையில் தொடங்கினோம். ராதிகா மேடம்தான் முதல் ஷோரூமை திறந்துவெச்சு வாழ்த்தினாங்க. இப்போ மொத்தம் ரெண்டு கிளைகள் இருக்கு.
என்கிட்ட பயிற்சி எடுக்க வெளிநாடுகளில் இருந்து பலரும் வர்றாங்க. நான்தான் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன். சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு என்று அந்த பேட்டியில் நடிகை சந்தோஷி கூறியுள்ளார்.

#Santhoshi #Pregnant #PLUSH Boutique&Beauty #Chinnathirai #RaadhikaSarathkumar #Tamilcinemaking