AD

திருமணத்தை வெறுக்கும் நடிகை!!

நடிகைகள் 30 வயதை கடந்து விட்டாலே போதும் அவர்களுடைய திருமணம் எப்போது என்பதை கேட்டு கேட்டு  ஒரு வழி செய்து விடுவார்கள்  ரசிகர்கள். அதிலும் காதலன் இருந்தால் போதும் திருமணம் குறித்து ஒவ்வொரு முறையும் கேள்வி எழுப்புவதை பத்திரிக்கையாளர்களும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். நடிகை ஸ்ருதிஹாசனிடமும் திருமணம் எப்போது என தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தற்போது தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், படங்கள்
நடிப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எப்போது நினைக்கிறேனோ... அப்போது, கண்டிப்பாக அனைவரிடமும் கூறி திருமணம் செய்து கொள்வேன் என தன்னுடைய திருமணம்  குறித்து பேசியுள்ளார்.

நடிகை  ஸ்ருதிஹாசன் நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.



#shruthihassan #tamil cinema #kollywood #marriage #shruthi marriage plan #kamalhassan #tamilcinemaking