AD

ஷிவானி எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும்,  ரசிகர்களால் அதிக அளவு வரவேற்பு பெற்று வருகிறது. அதே போல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் தனி  கூட்டமே உள்ளது. சில சீரியல்களை குடும்ப தலைவிகள் மட்டும் இன்றி, இளைஞர்களும் விரும்பி பார்க்கின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான "பகல் நிலவு" சீரியல் மூலம் இணைந்த ஜோடிகள் அசிம் மற்றும் ஷிவானி. இந்த தொடர் இன்னும் நிறைவடையாத நிலையில் 'கடைக்குட்டி சிங்கம்' என்கின்ற  சீரியலிலும் இதே ஜோடிகள் இணைந்து நடித்து கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் இருவருக்குமே கார்த்தி, செம்பாவுக்கு இருக்கிற அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  மேலும் இருவரும் இணைந்து டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென ஷிவானி "கடைக்குட்டி சிங்கம்" சீரியலில்  இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது வரைக்கும்  இதற்கான காரணம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இந்த சீரியலை விட்டு வெளியேறிய காரணத்தை தெரிவிப்பாரா? மாட்டாரா? ஷிவானி பொறுத்திருந்துதான்  பார்க்கவேண்டும்.


#kadiakutty singam #shivani #tamil cinema #kollywood #seriyal #vijay tv #pakal nilavu #tamilcinemaking