AD

மீண்டும் வில்லனாகும் நடிகர் விஜய்சேதுபதி!!

நடிகர் விஜய் சேதுபதி வித விதமான கெட்டப்புகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் அதிக முக்கியதுவம்  காட்டி வருபவர். குணச்சித்திரமோ, நெகட்டிவ் கதாபாத்திரமோ கதை கூறும் போது பிடித்துவிட்டால், யோசிக்காமல் உடனே ஒப்பந்தமாகிவிடுவார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் மெகா பட்ஜெட் படமான, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படம் மூலம் தெலுங்கிலும் கால் பதித்திருக்கிறார். இந்நிலையில் இவர் மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்  வெளியாகியிருக்கின்றன. இந்தப் படத்தை ‘ரங்கஸ்தலம்’ படத்தை இயக்கிய இயக்குநர் சுகுமாரின் அசோசியேட், புஜ்ஜி பாபு சனா இயக்குகிறாராம். மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து, சுகுமார் இதனை தயாரிக்கிறார்.

அவர் கதை சொல்லிய விதம் பிடித்து விடவே, படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டாராம் விஜய் சேதுபதி. இதில் வைஷ்ணவ் தேஜ், மனீஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#tamil cinema, #Vijay Sethupathi #tamilcinemaking