AD

கர்ப்பமாக இருப்பதாக வதந்தி முற்றுப்புள்ளி வைத்த முன்னணி நடிகை...!!!

இந்தியில் 'ராம்லீலா’, ’பாஜிராவ் மஸ்தானி’, ’பத்மாவதி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து  நடித்த ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் 6 வருடமாகக் காதலித்து கடந்த ஆண்டு  திருமணமும்  செய்து கொண்டனர். சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது தீபிகா வயிறு பெரிதாக இருந்ததாகவும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் தகவல் வெளியில் கசிந்தது.

தான் கர்ப்பமாக இருப்பதாகக் கருதி வலைதளங்களில் வாழ்த்துச் செய்திகள் பகிர்ந்து வரும் நபர்களுக்கு கடும் கோபத்துடன் பதில் அளித்து வருகிறார் முன்னணி இந்தி நடிகையான தீபிகா படுகோனே.

#deepikaaboutherpregnancy #Deepikapadukone #Ranveersingh