AD

வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த எமிஜாக்சன்!!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை எமிஜாக்சன் பதிவு செய்திருந்தார் சென்ற வாரம். இந்த பதிவினால் எமிஜாக்சன் மீது விமர்சனங்கள் எழுந்தாலும்,  அந்த விமர்சனங்களை அவர் கண்டுகொள்ளவில்லை.  தற்பொழுது ஒரு பேட்டியில் பதில் சொல்லி இருக்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியிலிருந்து , 'நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே ஆறு வாரங்களுக்கு தெரியாது என்றும், கர்ப்பம் என்று தெரிந்தவுடன் தேவையான சிகிச்சைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தான் இப்போதும் இந்தியா, இலங்கை, நியூயார்க் என சுற்றி வருவதாகவும் குழந்தை பிறந்த பின்னர்  எனது மகன் அல்லது மகள் என்னுடன் உலகை சுற்றுவார்கள்' என்றும் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் ஜார்ஜை திருமணம் செய்யவுள்ள எமிஜாக்சன் திருமணத்திற்கு பின் குழந்தையை பொறுப்பாக கவனித்து கொள்ளவிருப்பதாகவும், தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில்  "2.0"என்ற திரைப்படத்தில்  ரஜினிகாந்த்துடன்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Amy Jackson #Pregnant #Issu #Tamilcinemaking