AD

நடிகர் பாபி சிம்ஹா படத்தில் நடிக்க தடை!!

ரோஜா புகழ் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம்தான்  "அக்னி தேவி".  இந்த படத்தில் நடித்த பாபி சிம்ஹா கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் படப்பிடிப்பில் இடையிலேயே வெளியேறியுள்ளார். இதனால்  இயக்குநர் பால்ராஜ் "விஎப்எக்ஸ்" டூப் உதவியுடன் மீதி படத்தை எடுத்து முடித்தார்.

சென்ற வாரம் இந்த படம் திரைக்கு வந்தது, இதை கண்ட நடிகர் பாபி சிம்ஹா அதிர்ச்சி அடைந்தார். பின்பு  காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்தார். இந்நிலையில் இந்த புகாரை வாபஸ் வாங்க தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  ஆனால் நடிகர் பாபி சிம்ஹா மறுத்துவிட்டார். இதனையடுத்து நடிகர் பாபி சிம்ஹா படத்தில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால தடை விதித்துள்ளது.


#Bobby Simha #Agni Devi #Balraj #Producer Association #Tamilcinemaking