AD

கமல் ஹாசனின் புத்திசாலித்தனமாக பதில்கள்!


நடிகர் கமல் ஹாசன் முதல் முறையாக தேர்தலில் பங்கு கொள்கிறார். புத்திசாலித்தனமாக மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர்களை மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் தேர்வு செய்து அறிவித்தார்.

இந்த நிலையில் மக்கள் ஆதரவையும் இளைஞர்களின் ஆதரவையும் பெறுவதற்காத, இன்ஸ்டாவில் மக்களை அவரிடம் கேள்வி கேட்க வைத்து அதற்கு பதில் சொல்லி வருகிறார்.

இந்த நிலையில் முதலில் ஆர்த்தி என்ற பெண் உலகநாயகன் அரசியலிற்கு வந்தது மக்களுக்கு நல்லது என்றதோடு, அவருக்கு தான் நான் வாக்களிப்பேன் என்று கூறியும், கமல் ஹாசன் அரசியலிற்கு வரவேண்டும் என்று தான் விரும்பியதாகவும் கூறினார்.

அதற்கு கமல் ஹாசன் நீங்கள் சரியான தேர்வை தான் செய்திருக்கிறீர்கள் என்றும், இதே போல் உங்களது கருத்துக்களை மத்தவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் ஸ்வரூபா என்ற பெண் கமல் ஹாசன் அரசியலில் ஜெயித்தால் முதலில் என்ன செய்வார் என்று கேட்டதற்கு கமல் ஹாசன் முதலில் ஊழலை ஒழிப்பதாக கூறினார். இது போல பல கேள்விகளுக்கு பதில் கூறி வருகிறார்.


#MakkalNeedhiMaiam #MNM #KamalHaasan #Election2019 #TamilNaduPolitics  #TamilNadu | #TamilNews #LatestTamilNews #LatestNewsTamil #Tamilcinemaking