AD

சிவகார்த்திகேயனுடன் கை கோர்த்த பாரதிராஜா!


தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து பெரியாத்திரையில் சாதித்தவர்கள் என்று பார்த்தால் அதில் முக்கிய பங்கு சிவகார்த்திகேயனுக்கும் கிடைக்கும். சிறிய காலகட்டத்தில் பெரிய இடத்தை பிடித்த நடிகர் என்று சொல்லலாம். தற்போது அவரது 16-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டியராஜன் இயக்குகிறார்.

சன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் மே 1 ஆம் தேதி சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் இணைந்து நடித்த மிஸ்டர் லோக்கல் படம் வெளியாக இருக்கிறது. மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ராகுல் ப்ரீத் சிங்குடன் இணைந்து பெயரிடப்படாத படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.