AD

ஓவியாவின் அடுத்த பட அறிவிப்பு!


வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி ஜீவா நடித்துள்ள கீ, வைபவ் நடித்துள்ள RK. நகர், கலையரசன் நடித்துள்ள Gangs of Madras, விஜய் குமார் நடித்துள்ள உறியடி 2 என இத்தனை திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதில் உறியடி 2 படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

இந்த படம் தான் அதிக வசூல் பெரும் என்று கிசுகிசுக்க பட்ட நிலையில், தற்போது இந்த வரிசையில் ஓவியா நடித்துள்ள கணேஷா மீண்டும் சந்திப்போம் என்ற படமும்  இணைந்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தான் வெளியாகியுள்ளது.

90ml படம் போல் கணேஷா மீண்டும் சந்திப்போம் படத்திற்கு பெரிதாக ப்ரோமோஷன்ஸ் இல்லாததால் படத்தின் வெற்றி கேள்வி குறியாக தான் இருக்கிறது. மேலும், ஓவியா ரசிகர்கள் படத்திற்கு அதிக வரவேற்பு கொடுத்து தான் வருகிறார்கள். ஓவியா பிக் பாஸ்சிற்கு பிறகும் கூட சரியான படங்களை தேர்வு செய்வது போல் தெரியவில்லை என்று தான் சில ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.