AD

தமிழ் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?


தமிழ் சினிமா பிரபலங்களுக்கு ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது என்று பார்த்தால் அதிர்ச்சி தான் அடைவீர்கள். ஆம், தற்போதைய லிஸ்ட் படி தமிழ் சினிமா பிரபலங்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜீவா- 2-3 கோடி

ஜீவா தற்போது கைவசம், கீ, சீறு, ஜிப்ஸி, கொரில்லா, 83 என ஐந்து படங்கள் கையில் வைத்திருக்கிறார். அதில் கீ வரும் 5ஆம் தேதி வெளியாக போகிறது. இவர் ஒரு படத்திற்கு இரண்டிலிருந்து மூன்று கோடி வரைக்கும் சம்பளம் வாங்குகிறாராம்.

ஆர்யா, விஷால், ஜெயம்ரவி, சந்தானம்- 3-5 கோடி 


ஆர்யா சில நாட்கள் முன்பு தான் திருமணம் செய்தார் அவர் நடிப்பில் காப்பான் வெளியாக உள்ளது. விஷாலிற்கு கூடிய விரைவில் திருமணமாக உள்ளது இவரது நடிப்பில், அயோக்கியா, மத கஜ ராஜா என இரு படங்கள் இந்த ஆண்டிற்குள் வெளியாக உள்ளது. ஜெயம் ரவி இறுதியாக அடங்க மறு படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் கோமாளி படம் வெளியாக உள்ளது. சந்தானம் நகைசுவை நடிகராக அறிமுகமானாலும் தற்போது ஹீரோவாக மாறியுள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் தில்லுக்கு துட்டு திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து, சர்வர் சுந்தரம், மத கஜ ராஜா, மாப்பிளை விநாயகர், மன்மதன் 2 என இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் நான்கு படங்கள் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ஆர்யா, விஷால், ஜெயம்ரவி, சந்தானம் என இவர்கள் அனைவரும் படத்தின் வெற்றியை முன்னிறுத்தி மூன்றிலிருந்து ஐந்து கோடி வரை சம்பளம் வாங்குகிறார்களாம்.

சிம்பு- 7-8 கோடி

சிம்பு தற்போது மாநாடு படத்திற்காக உடல் எடையை குறைக்க வெளிநாடு சென்றுள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவான் திரைப்படத்திற்கும் செக்க சிவந்த வானம் படத்திற்கும் ஏழிலிருந்து 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். இவர் நடிப்பில் மாநாடு படத்தை தொடர்ந்து, இந்தியன் 2, வாலிபன், வேட்டை மன்னன், மன்மதன் 2 என ஐந்து படங்கள் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி- 8 கோடி 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான சூப்பர் டிலக்ஸ் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து, சைராநரசிம்ம ரெட்டி, மார்கோனி மதை என இருபடங்கள் வெளியாக இருக்கிறது. இவர் ஒரு திரைப்படத்திற்கு 8 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

தனுஷ், கார்த்தி- 10 கோடி

தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான மாரி 2, வடசென்னை படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் என்னை நோக்கி பாயும் தோட்டா, அசுரன், சூதாடி என மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் கார்த்தி இறுதியாக நடித்த தேவ் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், படம் வியாபாரம் செய்தது குறைவு என்று தான் சொல்லப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து, கைதி என்ற படத்திலும், பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்களாம். தனுஷ் மற்றும் கார்த்தி ஒரு திரைப்படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்களாம்.

சிவகார்த்திகேயன்- 15 கோடி 

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான படம் காண, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததோடு தயாரிப்பாளராகவும் நடித்திருந்தார் சிவா. மேலும் இந்த படத்தை தொடர்ந்து, ஹீரோ, மிஸ்டர் லோக்கல், SK14, SK16, SK17 என அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இவர் ஒரு படத்திற்கு 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறராம். படம் வெற்றி [பெற்றால் அடுத்த படத்தின் சம்பளத்தை உயர்த்தவும் செய்கிறாராம்.

விக்ரம்- 20 கோடி 

சீயான் விக்ரம் இறுதியாக நடித்தது சாமீ ஸஃயார் படத்தில், படம் அந்த அளவிற்கு வசூல் குவிக்கவில்லை. இருந்தும் அந்த படத்தை தொடர்ந்து, கடாரம் கொண்டான், மகாவீர் கர்ணா, துருவ நட்சத்திரம் என 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். படத்தின் வெற்றி தோல்வி எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ஒரு படத்திற்கு 20 கோடி வரை சம்பளம் வாங்குவாராம்.

சூர்யா- 20-22 கோடி

சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தை தொடர்ந்து சூர்யா NGK, காப்பான் என இருபடங்களில் நடித்து வருகிறார். இவர் முந்தைய படத்தின் வெற்றியை கணக்கில் வைத்து இருவதிலிருந்து 25 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

கமல் ஹாசன் - 30 கோடி

உலகநாயகன் கமல் ஹாசன் தற்போது அவரது தயாரிப்பில் தான் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் விஸ்வரூபம் 2. இந்த படத்தின் வெற்றி இப்போது வரை கேள்வி குறி தான். இந்த படத்தை தொடர்ந்து இந்தியன் 2, சபாஷ் நாயுடு என இரு படங்களில் நடித்து வருகிறார். இவரது தயாரிப்பில் நடப்பதால் இவரே இவருக்கு ஒதுக்கிய சம்பளம் 30 கோடியாம்.

அஜித் - 35 கோடிக்கு மேல்!



தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் தல அஜித் 35 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால் படம் மிக பெரிய வெற்றி என்பதால், தற்போது நடித்து வரும் நேர் கொண்ட பார்வை படத்தில் 35 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. படத்தின் வெற்றியை பொறுத்து சம்பளத்தை உயர்த்தி கொண்டே இருப்பாராம் தல அஜித்.

விஜய் - 50 கோடி 

தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான தேறி, மெர்சல், சர்கார் என அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்பதால் இவரது சம்பளம் 50 கோடி வரை உயர்ந்துள்ளதாம். தற்போது விஜய் 63 படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

ரஜினிகாந்த் - 60 கோடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தலைவர் 166 படத்தில் நடித்து வருகிறார். இவரது இறுதி படமான பேட்ட பெரிய ஹிட் என்பதால் ஒரு படத்திற்கு 60 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். படத்தின் வெற்றியை பொறுத்து சம்பளம் உயர்ந்துகொண்டே போகுமாம்.