AD

விவாகரத்துக்கு தயாராகும் நடிகை பிரியங்கா!!

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸும் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது. இவர் தமிழில் நடிகர் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இவர் முன்னாள் உலகி அழகி பட்டம் வென்றவர்.  பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹொலிவூட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார்.
தன்னை விட 10 வயது குறைந்த நிக்கை காதலித்து, டிசம்பர் 2018ல் திருமணமும் செய்துகொண்டார். பிரியங்கா இந்து மதத்தையும், நிக் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு வழக்க படியும் திருமணம் நடைபெற்றது. இதில் ஹிந்தி நடிகர்கள், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்த 3 மாதத்துக்குள் அவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக, ஓகே (OK magazine) என்ற ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
திருமணத்துக்குப் பின் இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை என்றும் வேலை, பார்ட்டிக்குச் செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது உட்பட பல விவகாரத்தில் இருவருக்கும் பிரச்னை என்றும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அவர்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்த விவாகரத்துக் கதையில் உண்மையில்லை, அது வெறும் வதந்திதான் என்றும் பிரியங்காவும் நிக் ஜோனாஸும் குடும்பத்துடன் மியாமியில் விடுமுறையை கழித்து வருவதாகவும் பிரியங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Bollywood #Priyanka Chopra  #Nick Jones #Divorce #Tamilcinemaking  #ok magazine