AD

பார்த்திபன் எந்த சின்னத்திற்கு ஆதரவளிக்கிறார் தெரியுமா?


நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நேற்று மாலை தான் எந்த கட்சி சின்னத்திற்கு ஆதரவு கொடுக்கப்போகிறேன் என்று நாளை மாலை 6 மணியளவில் சொல்கிறேன் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். சொன்னது போல் இன்று மாலை 5:30 மணியளவில் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சினத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். ஆம், ஏனெனில் பார்த்திபன் அறிவித்தது போல் ஒரு சின்னமே தற்போதைய தேர்தலில் போட்டியிடவில்லை. அப்படி என்ன சின்னம் என்று பார்த்தால் ஒத்த கால் செருப்பு சின்னம் தான்.


ஒரு செருப்பின் புகைப்படத்தை பகிர்ந்ததோடு இல்லாமல், ஒத்த கால்ல நிக்கிறோம் மொத்த தொகுதியையும் என்றும் கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். இது ஒரு படத்தின் ப்ரோமோஷன் வேலையாக இருக்கலாம் என்றும் பலர் கூறி வருகிறார்கள். இதற்கான விளக்கத்தை பார்த்திபன் தான் கொடுக்க வேண்டும்.