AD

நடிகர் விவேக் அரசில்பிரவேசமா!!

மரக்கன்றுகள் நடும் பணியில் "பசுமை கலாம்" என்ற பெயரில் தமிழகத்தில் ஈடுபட்டு வருபவர் நடிகர் விவேக். அரசியல் தொடர்பாக பட்டும் படாமல் கருத்து தெரிவிப்பது  விவேக்கின் வாடிக்கையான வழக்கம். தியேட்டர்களில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் அரசு விழிப்புணர்வு விளம்பரங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். தற்போது தேர்தல் காலம் என்பதால்,  நடிகர் விவேக் அரசியலில் ஈடுபடப்போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளார்.

அப்படி பரவும் செய்தி உண்மையில்லை என்றும், அது வதந்தி என்றும் நடிகர் விவேக் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், “இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்  நான் எந்தக் கட்சியிலோ  அமைப்பிலோ இல்லை. பொதுமக்களில் நான் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அதை நான் செவ்வனே செய்வேன். அனைத்துக் கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.” என்று தெரிவித்திருக்கிறார்.

#Actor Vivek #Political #Rumor #Twitter