AD

ஸ்ருதியுடன் சென்ற கமல் அவரது வாக்கை செலுத்திய புகைப்படம்


ஒரு இந்தியனாக அனைவர்க்கும் வாக்கு செலுத்த வேண்டிய கடமை இருக்கிறது.  இது நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் பாகம் ஆகும். இன்று தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அவர்களது ஓட்டுகளை அவரவர் வாக்கு சாவடியில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பல நடிகர்களும் அவர்களது வாக்கை பதிவு செய்து வருகிறார்கள். அதிலும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அவரது மகள் ஸ்ருதியுடன் சென்று அவர்களது ஓட்டை செலுத்தியுள்ளார்கள்.


நடிகர், நடிகைகளை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் அங்கு கூடி வரவேர்த்திருக்கிறார்கள். மேலும், அங்கு மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று கமல் மற்றும் ஸ்ருதி அவர்களது  ஓட்டை பதிவு செய்துள்ளார்கள். பத்திரிகையாளர்களும் அனைத்து பிரபலங்களையும் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.