வாக்கு சாவடியில் நடந்த சோதனை | ஓட்டு போடாமல் வீடு திரும்பிய பிரபலங்கள்
இரும் அவரவரின் ஓட்டுகளை பதிவு செய்துகொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் பல மக்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதனால் பலராலும் வாக்களிக்க முடியாமல் அவரவர் வீட்டிற்கே திரும்பி சென்று வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் துணை நடிகர் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என்பது தெரியவந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயன் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை. எனவே அவர் ஒட்டுப்போட செல்லவில்லை.
இதேபோல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் ஓட்டுப்போடுவதற்காக துணை நடிகர் ரோபோ சங்கர் இன்று காலை 6.30 மணியிலிருந்து காத்திருந்தார். ஆனால் அவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவராலும் ஓட்டுப்போட முடியவில்லை. இதேபோல நடிகர் ரமேஷ் கண்ணாவிற்கும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் ஓட்டு இல்லை. தமிழகத்தின் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இல்லை என சிலர் புகார் தெரிவித்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தினால் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என சிலர் விரக்தி அடைந்துள்ளனர்.
#sivakarthikeyanvoteproblem #roboshankarvoteproblem #rameshkannavoteproblem #voteproblemforcelebrities #Vote2019 #celebritiesvote2019
Post a Comment