AD

கமல் வாழ்வில் சந்தித்த மொத்த சர்ச்சைகள்


கமல் அவர்கள் முத்தக்காட்சிக்கும் பேர் போனவர் ஆவர். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்களில் முத்தக்காட்சிகள் இடம் பெற்று, இன்றளவும் சர்ச்சைக்குரிய விவாத பொருளாக மாறி உள்ளது. புன்னகை மன்னன், மகாநதி, குருதிப்புனல்,ஹே ராம், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் அவர் இத்தகைய காட்சிகளில் நடித்துள்ளார். 1975 ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் படத்தில் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீ வித்யா நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு பேட்டி அளித்த கமல், அவரை காதலிப்பதாக பேட்டி அளித்தார். இருப்பினும், 1978 ஆம் ஆண்டு பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை கமல் காதல் திருமணம் செய்தார். பின்னர் மனவேறுபாடு காரணமாக 10 ஆண்டுகள் கழித்து, சரிகாவை திருமணம் செய்து, வாணி கணபதியை விவாகரத்து செய்தார். இந்த தம்பதியினருக்கு பிறந்தவர்கள் தாம், ஸ்ருதி ஹாசனும், அக்ஷரா ஹாசனும். எனினும் கருது வேறுபாடு காரணமாக சரிகா கமலை விவாகரத்து செய்தார். சரிதாவை கமல் பிரிந்ததை அடுத்து, நடிகை கௌதமி கமலுடன் LIVING TOGETHER RELATIONSHIP இல் 13 ஆண்டுகள் வாழ்ந்தார் (திருமணம் செய்யாமல்). பின்னர் கௌதமியும் கமலை பிரிவதாக அறிவித்தார்.

கமல் பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். உத்தம் வில்லன் படம் வெளியான போது, கமல் அவர்கள் மதத்தின் உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் செயல் பட்டு வருகிறார் என்று கூறி இந்திய தேசிய லீக் கட்சி இவரை தேசிய  பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வற்புறுத்தியது. அது மட்டும் இல்லை. கமல் நடிப்பில் வெளியான வசூல் ராஜா MBBS திரைப்படத்தின் பெயருக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். எனினும் இந்த படம் அதே பெயரில் வெளியாகி வெற்றி அடைந்தது, இதை தொடர்ந்து வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் சரி, தசாவதாரம் திரைப்படமும் சரி, சர்ச்சையில் சிக்கியது. மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில் உள்ளதாக கூறி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் எழுப்பினார். மேலும் தசாவதாரம் திரைப்படத்தில் வைணவர்களும் சைவர்களுக்கும் இடையேயான மோதல் தவறுதலாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து வெளியான விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமிய மத உணர்வுகளை காய படுத்துவதாக கூறி தமிழக அரசு அப்படத்தை தடை செய்தது. பின்னர் சில காட்சிகளை நீக்கி வெளியிட்டது. மன்மதன் அம்பு திரைப்படத்தில் கமல் எழுதிய பாடலான கண்ணோடு கண் கலந்தால் என்னும் பாடல் கடும் சர்ச்சையை கிளப்பியது. அதனால் இந்த பாடல் நீக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்கு Twitter இல் இரங்கல் செய்தி பதிவிட்ட கமல், கடும் சர்ச்சைக்கு ஆளானார். "சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்ற இவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் Meme களாகவும் உலா வந்தது. இந்நிலையில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய கமல், இந்து தீவிரவாதிகள் இன்னும் நாட்டில் இல்லை என கூற முடியாது என்றார். இது பல்வேறு தரப்பினரிடையே கமல் இந்து மதத்திற்கு எதிரானவர் என்ற பேச்சை உள்ளாக்கியது. ஏற்கனவே கமல் அவர்கள் மஹாபாரதம் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.  அரசியலில் மேலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ள ஆர்வம் காட்டிய நிலையில் தான் கமல் அவர்களின் twitter பதிவுகள் சர்ச்சையை கிளப்பியது. கமலின் twitter பதிவுகள் குறித்து பல்வேறு தரப்பினர் கருது தெரிவிக்க, பா. ஜ. க மாநில தலைவர் தமிழிசை கமலின் பதிவுகள் புரிய ஒரு கோனார் உரை தேவை என்று கூறினார். Twitter இல் தன்னை மிகவும் பிரபலமாக வைத்துள்ள கமல், பல்வேறு விஷயங்களுக்கு குரல் எழுப்பினார். அதில் ஒன்று தான் மெர்சல் திரைப்படத்தின் போது அவர் பதிவிட்ட கருத்து. அதில் அவர் கருத்து சுதந்திரம் நசுக்க பட கூடாது என கூறி இருந்தார். ரஜினியை பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் கமல். எனினும், அவர் எப்போதும் அவருடன் நட்புடன் உள்ளதாக தான் கூறி வருகிறார்.  இதன் பின்னர் பல மேடைகளில் கமல் அரசியல் பேச ஆரம்பித்தார். மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், தமிழகத்தில் எதுவும் சரி இல்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் ஒரு இடத்தில பேசிய கமல், கிராமங்களை தத்தெடுக்க முடிவெடுத்ததாக கூறினார். ஒரு நடிகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக, பாடலாசிரியராக, பாடகராக, சமூக சேவகராக தன்னை வெளிப்படுத்தி உள்ள கமல், அரசியலிலும் ஜெயித்து, ஒரு மாற்றத்தை கொண்டு வருவாரா? அதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

#kamalvideo #kamalnewvideo #kamalhistory #kamalperosnalhistory #kamalmarriedlife