AD

10 நாளில் 130 கோடி

ராகவா லாரன்சின் முனி 4 ஆம் பாகம், காஞ்சனா 3 ஆம் பாகம் என்ற பெயரில் கடந்த வாரம் வெளியானது.

விமர்சகர்கள் படத்தை தாறுமாறாக கிழித்தாலும் வசூலும் தாறுமாறாக குவிந்து கொண்டுதானிருக்கிறது. ஹாலிவுட்டின் அவெஞ்சர்ஸ் புயலிலும் காஞ்சனா பேயாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

கடந்த 10 நாளில் காஞ்சனா 130 கோடி வசூலித்துள்ளது. படத்தின் மக்கள் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் இருவார முடிவில் காஞ்சனா  200 கோடியை வசூலித்து விடும் போலிருக்கிறது.

திரையிட்ட பெரும்பான்மையான தியேட்டர்களில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது, காஞ்சானாவும், அவெஞ்சர்சுமே தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொண்டதால் வேறு படங்கள் பற்றிய பேச்சே இல்லை.


#Kanchana  #3Raghava_Lawrence  #Oviya_Nelson #tamilcinemaking