AD

சீனா சென்றுள்ள விஜய் குடும்பம்

ரசிகர்கள் தொல்லையால்  அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 63 ஆவது படத்தின் படப்பிடிப்புக்களை சென்னையை விட்டு வெளியே நடத்தத் திட்டமிட்டுள்ளது படக்குழு

சென்னை  பின்னி மில்லில் படப்பிடிப்பு நடந்தபோது ரசிகர்களை சந்தித்த விஜய், ராயபுரம் பீச் பகுதியில் நடைபெற்றபோது ரசிகர்களை சந்திக்கவில்லை. 

இதனால் அந்தப் பகுதியில் ரசிகர்களின் படையெடுப்பு அதிகமாக இருந்ததால் தள்ளுமுள்ளு நிலை ஏற்பட்டுப் பின்னர் பொலிஸார் தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர்.

இதன் காரணமாகவே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தனது குடும்பத்துடன் ஓய்விற்காக  சீனா சென்றிருந்தார் விஜய். 

அப்போது விஜய்யும் அவரது மகன் சஞ்சயும் நடந்து செல்லும் போட்டோ வெளியானதை அடுத்து இப்போது விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் மகன் சஞ்சயுடன் ஒரு ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் இன்னொரு புகைப்படத்தையும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கியுள்ளனர்.



#Vijay_family,  #adli,  #chennai