ரஜினிக்கு எதிராக யோகிபாபு செய்யும் வேலை என்ன தெரியுமா?
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தர்பார் என்ற பிரமாண்டமான படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் பூஜையும் அண்மையில் தொடங்கியது. இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் என பல பிரபலங்கள் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்கள். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பதை 1st லுக் போஸ்டர் வெளியிடும்போதே தெரிவித்திருந்தார்கள். இதை தெரிந்தும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒரு படத்திற்கு கதை எழுதி அந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய போகிறாராம்.
யோகிபாபு லொள்ளு சபாவில் சேர்ந்த போதே நகைச்சுவை கதைகளை எழுதி இயக்குனராக தான் முயற்சிகள் எடுத்தாராம். ஆனால் அது சரியாக அமையாததால் தான் நகைச்சுவை நடிகராக நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது பல படங்களில் நடித்து முடித்ததால் கதை எழுத தொடங்கிவிட்டார். இனி பல கதைகள் இவரின் பெயரில் வெளியாக இருக்கிறது.
மேலும் இவர் எழுதும் கதைகளில் புதுமுக இயக்குனர்களை வைத்து தான் இயக்க போகிறாராம். வாய்ப்பிற்காக கஷ்ட படுபவர்களுக்கு இப்படி ஒரு உதவி செய்வோம் என்று தான் இவ்வாறு செய்கிறாராம். யோகிபாபுவின் முதல் கதையை ராஜசேகர் என்று புதுமுக இயக்குனர் தான் இயக்க இருக்கிறார். இவர் சிவா மனசுல சக்தி இயக்குனர் ராஜேஷின் அஸோஸியேட் என்று கூறப்படுகிறது.
#yogibabu #Rajinikanth #darbar #thalaivar167 #ARMurugadoss
Post a Comment