AD

திரும்பவும் சர்ச்சைக்கு உள்ளான நடிகை கஸ்தூரி..!!

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டியை பார்த்த நடிகை கஸ்தூரி கடுப்பாகி ட்வீட் செய்தார். அதில் அவர், "என்னய்யா இது பல்லாண்டு வாழ்க" படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அவரின் இந்த பதிவை  பார்த்த ரசிகர்கள்  அது எப்படி "எம்.ஜி.ஆர்" அவர்களை அவமதிக்கலாம்!! என்று கூறி கொந்தளித்துவிட்டார்கள். இந்நிலையில் இது குறித்து கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இதோ நடிகை கஸ்தூரியின் விளக்கம்:-

MGR காதல் காட்சியில் நடித்ததில் , கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும் பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.

புரட்சி தலைவர் ஒப்பற்ற தலைவர், தொண்டர்களின் இதயதெய்வம் என்பது எவ்வளவு உண்மையோ, நான் விரும்பும் நவரசகலைஞன் என்பதும் உண்மை. தெய்வத்தை இழிவுபடுத்தி விட்டேன் என்ற குற்றசாட்டை வன்மையாக மறுக்கிறேன். காமம் இழிவு, உடல் ரீதியான வெளிப்பாடுகள் தமிழ் கலாச்சாரத்திற்கு குறைவு என்ற மனப்பான்மையே இதற்கு காரணம். இந்து மத தெய்வங்கள் கூட காதல் லீலை புரிந்தவர்கள்தான்.

உடனே அமைதிப்படை அல்வா , தத்தோம் தகதிமி தோம் என்று தூக்கி கொண்டு வருபவர்களுக்கு - நான் மிகவும் அற்பணிப்புடன் நடித்த காட்சிகள் அவை. பொய்யாக அழுவது சுலபம். ஆக்ரோஷமாக நடிப்பது சுலபம். ஆனால் கவர்ச்சியை வெளிப்படுத்த மிகுந்த திறமையும் உழைப்பும் தேவை.

MGR அவர்களை தலைவராகவும் தெய்வமாகவும் மட்டும் பார்த்து நடிகராக அவர் வரலாற்றை மறைப்பது ரசிகனுக்கு அழகல்ல.

இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்.

என்று அவரின் facebook பக்கத்தில் இந்த பதிவை பதிவு செய்துள்ளார்.

#kasthuri #twitter #issues #tamilcinemaking #ChennaiSuperKings #latestnews