AD

கர்ப்பமாக இருக்கும் ஏமி ஜாக்சனுக்கு அட்வைஸ் சொல்லும் ரசிகர்கள்...!!

நடிகை ஏமி ஜாக்சன் தற்பொழுது கர்ப்பமாக உள்ளார் என்று அனைவரும் அறிந்த விஷயமே. நடிகை ஏமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும்போது இப்படி செய்யலாமா? என்று அக்கறையுடன் கேட்டுள்ளனர். நடிகை ஏமி ஜாக்சனுக்கு லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் கடந்த ஜனவரி மாதம் மோதிரம் கொடுத்து நிச்சயம்  செய்தார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக ஏமி தனது சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார். ஏமிக்கு அக்டோபர் மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இந்நிலையில் அவர் தன்னுடைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ஏமி தனது காதலர் ஜார்ஜுடன் ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்துள்ளார். ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் தற்பொழுது வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஏம்மா, கர்ப்பமாக இருக்கும்போது இப்படி ஒர்க்அவுட் எல்லாம் தேவையாம்மா என்று அக்கறையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நடிகை ஏமியும், ஜார்ஜும் 2020ம் ஆண்டு கிரீஸில் திருமணம் செய்ய இருவரும் எண்ணி இருந்தார்கள். ஆனால் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதால் அவர்கள் முன்கூட்டியே திருமணம் நடக்கும்  என்று எதிர்பார்க்க படுக்கிறது.
#Amy Jackson #Latestnews #Tamilcinemaking