AD

பா. ரஞ்சித்திற்கு பிரான்சில் கிடைக்கும் புகழ்!


தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் பா. ரஞ்சித்தும் ஒருவர். இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக படம் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் தான் காலா. இந்த படத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை எடுத்து காட்டியிருப்பார் இயக்குனர். படத்திற்கும் மக்கள் மத்தியில் அதிக கிடைத்தது. இதை போல் தான் சிறிய பட்ஜெட்டில் பா.

ரஞ்சித் தயாரித்த படம் பரியேறும் பெருமாள், இந்த படத்திற்கும் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைத்தது. காரணம் படம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் வழிகளை சுட்டிக்காட்டும் படம் என்பதால் தான். இந்த படத்தை பார்ப்பவர்களை நிச்சயம் படம் கண்கலங்க வைக்கும் என்று சொல்லலாம். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் வரவேற்பு இப்போது வரை கிடைத்து வருகிறது. 

இந்த படம் திரைக்கு வந்த பிறகும் வெளிநாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது. இதுகுறித்து இந்த படத்தின் இயக்குநர் கூறியதாவது "பரியேறும் பெருமாள் படம் வெளியாகி பல மாதங்களுக்குப்பிறகு இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.


#pariyerumperumal #Ranjith #kala #france