AD

மீண்டும் திரைக்கு வரும் மாளவிகா

பிள்ளைகள் வளர்ந்துவிட மறுபடியும் சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி விட்டார் நடிகை மாளவிகா. 

அஜித் நடித்த உன்னைத்தேடி படத்தில் அறிமுகமான மாளவிகா  "வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும்..., கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு..." போன்ற பாடல்கள் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டார்.

2007 இல் சுமேஷ் மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகி விட்ட மாளவிகா, இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவானார். 

இப்போது தனது பிள்ளைகள் வளர்ந்து விட்டனராம் இதனால் தான் மீண்டும் நடிக்கப்போவதாக பேட்டியளித்துள்ளார் மாளவிகா

தமிழில் நடிக்க 2 இயக்குநர்களிடம் கதை கேட்டிருப்பதாகவும், என் திறமைக்கு ஏற்ற சவாலான எந்த மாதிரியான கேரக்டரிலும் நடிக்கத் தயாராக இருப்பதாகவும் மாளவிகா கூறியுள்ளார். 


#malavika, #tamilcinemaking