AD

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு கமலின் புதிய உறுதி மொழி


அரசியல் வாழ்க்கையில் இந்த ஆண்டு கால் எடுத்து வாய்த்த கமல் ஹாசனின் வருகையை பல இளைஞர்கள் வரவேர்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். கமல் ஹாசனுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் கிராமத்து மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கா என்று கேட்டால் அது கேள்வி குறி தான். சினிமாவில் புத்திசாலி என்று பெயரெடுத்த கமலிற்கு அரசியலிலும் புத்திசாலி என்று பெயர் கிடைக்குமா என்று காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

தற்போது வரை அவரின் அரசியல் பயணம் மக்கள் மத்தியில் நல்ல விதமாக தான் பேசப்பட்டு வருகிறது. மற்ற காட்சிகள் போல் இல்லாமல் தனித்து நிற்கும் கமலிற்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா என்பது அனைவர் மத்தியிலும் பேசப்பட்டு வரும் விஷயம் தான். இந்த நிலையில் கமல் இன்று காலை தான் அவரின் முதல் உறுதி மொழியை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டார்.  அதில் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதாக கூறினார்.

மேலும் தற்போது இரண்டாவது உறுதி மொழியை வெளியிட்டுள்ளார். அதில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக குறிப்பிட்டுள்ளார். படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்களுக்கு அவர்களின் திறமையை அறிந்து பயிற்சி கொடுத்து வேலை வாங்கி தருவேன் என்று கூறியுள்ளார் கமல்.

#kamalhaasan #makkalneethimaiyam #kamalpoliticalentry #kamalnewspeech