AD

அனிருத் பாட ஹிப் ஹாப் தமிழா இசையில் டக்குனு டக்குனு முதல் சிங்கில்!


சிவகார்த்திகேயன், நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்த படம் மிஸ்டர் லோக்கல். இந்த படத்தை ராஜேஷ். எம் இயக்கியுள்ளார். படத்தின் முதல் சிங்கில் நாளை வெளியாக இருக்கிறதாம். டக்குனு டக்குனு என்று தொடங்கும் இந்த பாடலிற்கு இசையமைத்தது ஹிப் ஹாப் தமிழா மற்றும் இந்த பாடலை பாடியவர் அனிருத்.

இவரக்ளின் கூட்டணியில் ஒரு பாடல் வெளியாக போகிறது என்றால் அது மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு தான். ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் வெளியான நட்பே துணை படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், இவரது இசையில் மிஸ்டர் லோக்கல் படமும் மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரிக்க காரணம் படத்தின் டீஸர் என்றும் சொல்லலாம். நாளை படத்தின் பாடல்கள் வெற்றி சிங்கில் வெளியானால் தெரிந்துவிடும்.