AD

தமன்னாவையே திருமணம் செய்து கொள்ளுவேன் - ஸ்ருதி


அண்மையில் பேட்டி ஒன்றில், தமன்னா ரொம்ப நல்ல பெண் நான் ஆணாக பிறந்திருந்தால் தமன்னாவை தான் திருமணம் செய்திருப்பேன் என்று ஸ்ருதி கூறியிருந்தார். இக் கருத்து எல்லோர் மத்தியிலும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து தமன்னா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ருதி என் நெருங்கிய தோழி. காமெடியாக தான் அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். அவர் என்னை பற்றி தெரிவித்தது அவரின் காதலர் மைக்கேல் கார்சேல் வரைக்கும் சென்றுள்ளது. மைக்கேல் ஸ்ருதிக்கு போன் செய்து நீ நிஜமாகவே தமன்னாவை திருமணம் செய்யப் போகிறாயா என்று கேட்டுள்ளார். இதை ஸ்ருதி என்னிடம் கூறினார்.

ஸ்ருதி என்னை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியதை யாரும் சீரியஸாக எடுக்க வேண்டாம். அது சும்மா காமெடிக்கு சொன்னார் என்று மேலும் தெரிவித்துள்ளார் தமன்னா.ஸ்ருதி காமெடியாக கூறியது வேறு விதமாக எடுத்துக் கொள்ளப்பட்டதால் தமன்னா இப்படி விளக்கம் அளித்துள்ளார்.

#shrutihassan #tamannah #tamilcinemaking