AD

அட்லி மீது நடிகை புகார்-தகாத வார்த்தைகளில் திட்டினார்..!!!


அட்லி தற்போது இயக்கி வரும் தளபதி63 திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. விஜய் இதில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மற்றும் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார்

சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக  செட் அமைக்கப்பட்டு ‘தளபதி 63’படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அட்லி மீது துணை நடிகை கிருஷ்ண தேவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில்,  ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லியின் திரைப்படத்தில் பணிபுரிய வந்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் போது, அட்லியும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகளில் திட்டி வேலை செய்ய விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள்.  எனவே அட்லி மற்றும் அவரது உதவியாளர்களை  விசாரித்து
உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.


#Atlee #ThalapathyVijay63 #Tamilcinemaking