AD

தன்னை விட வயது கூடிய நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர்...!!!

நடிகை மலைக்கா அரோரா பிரபல இந்தி நடிகைகளில் ஒருவர். இவர் மணிரத்னத்தின் "உயிரே" படத்தில் "தக்க தைய்ய தைய்யா" எனற பாடலுக்கு ஆடியவர் ஆவார். இவர் இந்தி ஹீரோ சல்மான் கானின் சகோதரர்   காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் இருக்கிறார்.

நட்சத்திர தம்பதிகளான இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர். தற்பொழுது மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த மலைக்கா வசித்து வந்துள்ளார். அவ்வப்போது டிவி நிகழ்ச்சியிலும் சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.
இந்நிலையில் இவருக்கும் போனிகபூரின் மகனும் பிரபல நடிகருமான "அர்ஜுன் கபூருக்கும்" காதல் என்று கிசு கிசு வெளியாகின. ஒன்றாக விழாக்களுக்குச் சென்றும்  வந்தனர். இருவரும் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை.  இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மலைக்காவுக்கு 45 வயது, அர்ஜுனுக்கு 33 வயது தான் ஆகின்றது.

இந்த காதல் குறித்து இருவருமே இதுவரை எதுவும் கூறாத நிலையில் வரும் 18 ஆம் தேதி இவர்கள் கோவாவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகம் கூறப்படுகிறது. இவர்கள் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி மலைக்கா கூறும் போது, எங்கள் திருமணம் பற்றிய செய்தி வேடிக்கையான ஒன்று. அதில் ஒரு உண்மையம் இ ல்லை வெறும் வதந்திதான். இதுபற்றி வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார் நடிகை மலைக்கா அரோரா.

#MalaikkaArora #ArjunKapoor #BoneyKapoor #Bollywood #Tamilcinemaking