AD

மிஸ்டர் லோக்கல் படத்தில் மொத்தம் 6 ஹீரோக்கள் ஆனால் ஒரே கதாநாயகி


ஐரா படத்தின் மூலம் நயன்தாராவின் நடிப்பை அனைவரும் பாராட்டிவிட்டோம். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். படம் மே 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. இது நகைச்சுவை கலந்த ரொமான்டிக் படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

மேலும், படத்தில் நயன்தாரா, சிவகார்திகேயனோடு இணைந்து, ஜீவா, கார்த்தி, ஜி. வி. பிரகாஷ், ஆர்யா, உதயநிதி என இத்தனை பிரபலங்களும் கேமியோ ரோலில் தோன்றப்போறார்களாம். அதைத்தொடர்ந்து, யோகிபாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா என இவர்கள் அனைவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்களாம். ஜீவா, கார்த்தி, ஜி. வி. பிரகாஷ், ஆர்யா, உதயநிதி என இவர்கள் 5 பேரும் மிஸ்டர் லோக்கல் படத்தின் இயக்குனர் ராஜேஷ் இயக்கிய முந்தைய படங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#mrlocal6heros #nayantharamrlocal #sivakarthikeyan #mrlocal #mrajesh #mrlocalcastandcrew #mrlocalcomedians