AD

தமிழ் சினிமா நடிகைகளின் சம்பள விவரங்கள்! கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்!

தமிழ் சினிமா நடிகைகளின் தற்போதைய சம்பளம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நாடிகளின் சம்பளங்களிற்கு இணையாக நடிகைகளுக்கு எப்போதும் தரமாட்டார்கள். நடிகர்கள் வாங்குவதில் பாதி சம்பளம் தான் நடிகைகளுக்கு தரப்படுகிறது. சரி தமிழ் சினிமா நடிகைகளின் சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம்.

நயன்தாரா - 3 கோடி

நடிகை நயன்தாராவின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஐரா. இந்த படத்தில் நயன்தாரா இரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும், இவரது நடிப்பை மக்கள் பாராட்டினார்கள். மேலும், நயன்தாராவின் நடிப்பில் அடுத்தடுத்து, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர்காலம், தளபதி 63, தலைவர் 166, காதுவக்குல இரண்டு காதல், சைரா நரசிம்ம ரெட்டி என 6 படங்களை கை வசம் வைத்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு 3 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

அனுஷ்கா ஷெட்டி - 2.5 கோடி

நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் பகமதி. இவர் திகில் படங்களை மட்டும் தான் தமிழில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனால் பகமதி படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் படம் இல்லை என்பதே உண்மை. அப்படி இருந்தும் ஒரு படத்தில் நடிக்க 2.5 கோடி சம்பளம் வாங்குவாராம்.

காஜல் அகர்வால், தமன்னா - 1.5 கோடி 

நடிகை காஜல் அகர்வால் தமிழில் இறுதியாக நடித்த படம் விவேகம், இந்த படத்தை தொடர்ந்து பாரிஸ் பாரிஸ் மற்றும் கோமாளி என இரு படங்களில் நடித்து வருகிறார். அதே போல் நடிகை தமன்னா, தமிழில் இறுதியாக நடித்தது கண்ணே கலைமானே படத்தில் தான். இந்த படத்தை தொடர்ந்து தேவி 2 மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறாராம். இவர்கள் இருவருக்கும் ஒரு படத்திற்கு 1.5 கோடி சம்பளமாக கிடைக்கிறதாம்.

திரிஷா - 80 லட்சம் - 1 கோடி

நடிகை திரிஷாவின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தை தொடர்ந்து, சதுரங்க வேட்டை 2, காதுவக்குல இரண்டு காதல் என இரு படங்கள் அடுத்து வெளியாக உள்ளதாம். இவர் ஒரு படத்திற்கு படத்தின் 80 லட்சத்திலிருந்து 1 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

ஸ்ருதி ஹாசன் - 70 - 75 லட்சம்


நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் சிங்கம் 3 படத்தில் தான் இறுதியாக நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு தற்போது தமிழில் கைவசம் வேறு படங்கள் இல்லை. ஆனால் இவர் ஒரு படத்தில் நடிக்க எழுவது லட்சத்திலிருந்து 75 லட்சம் வரை வாங்குவாராம்.

சமந்தா - 70 லட்சம்


நடிகை சமந்தா இறுதியாக தமிழில் நடித்தது சூப்பர் டிலக்ஸ் படத்தில் தான். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்த பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள். மேலும் இவருக்கு தற்போது தமிழில் படங்கள் எதுவும் கைவசம் இல்லை. தெலுங்கில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு 70 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.