AD

சூப்பர் ஸ்டாருடன் இணையும் ரம்யா கிருஷ்ணா!!

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் "ராஜமாதாவாக" நடித்து உலக அளவில் பெரும் புகழ் பெற்றவர் நடிகை ரம்யா கிருஷ்ணா.  இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான "சூப்பர் டீலக்ஸ்" படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை துணிச்சலுடன் தேர்வு செய்து நடித்து ரசிகர்களுடைய பாராட்டைப் பெற்றுள்ளார்.

தற்பொழுது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் தமிழ்வாணன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, அமிதாப் பச்சன் நடித்துவரும் திரைப்படம் தான் "உயர்ந்த மனிதன்".  இந்தப் படம் தமிழ், ஹிந்தி, ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில்  நடிகை ரம்யா கிருஷ்ணா நடிகர் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
மேலும் இந்த தகவல் குறித்த செய்திகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.  இந்த படத்தின் மூலம் முதல் முறையாக அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு மிகவும் வலுவான கதாப்பாத்திரம் கொடுக்க பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

#ramya krishna #tamil cinema #kollywood #bahubali movie #amithabh bachan #superstar #tamilcinemaking