AD

ஆஸ்திரேலிய கிளியுடன் யோகி

நாயை, குரங்கு, பன்னியுடன் நடத்த யோகிபாபு தற்போது ஆஸ்திரேலிய கிளியுடன் நடிக்கிறார்.

பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரித்து வரும் படம் 'காக்டெய்ல்'. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்க, இதில் யோகி பாபு  நாயகனாக வருகிறார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த "காக்டெயில்" என்கிற கிளியும் இந்தப் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. கிளியுடன் நடிக்க வசதியாக பல வாரங்கள் அந்த கிளியை யோகிபாபு தன்னுடனேயே வைத்துக் கொண்டு பழகி வருகிறாராம். கிளியின் பயிற்சியாளரும் உடன் இருக்கிறார்.

இந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. 


#Yogi_Babu, #australia, #tamilcinemaking