AD

டிக் டாக் செயலியை பான் செய்த மதுரை உயர் நீதி மன்றம்!


இந்த காலத்து இளைஞர்களுக்கு டிவி எந்த அளவிற்கு பொழுதுபோக்காக இருக்கிறதோ அதே அளவிற்கு அவர்கள் கையில் உள்ள போனும் மிகுந்த அளவிற்கு பொழுதுபோக்காக அமைந்துள்ளது. அனைவரும் போன் மூலம், சாட் செய்து மட்டும் இல்லாமால், வீடியோ மூலம் பேசுவது, மிக குறைந்த ஆடையில் வீடியோ எடுத்து பதிவிடுவது என பல தேவையற்ற வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இவ்வாறான இழிவான செயல்களை செய்ய டிக் டாக் செயலியை சிலர் பயன்படுத்தி வந்தார்கள்.

அந்த செயலிக்கான எதிர்ப்பு மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்காக பதிவாகியது. தற்போது விசாணைக்கு பிறகு அந்த செயலியை பான் செய்யும்படி கூகிள் நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் உயர் நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸ்சிற்கு மதிப்பு கொடுத்த கூகிள் நிறுவனம் அவர்களது பிலே ஸ்டோரில் இருந்த டிக் டாக் செயலியை டெலீட் செய்து முடக்கியுள்ளர்கள். ஆனால் ஆப்பிள் நிறுவனம் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்காமல் தற்போது வரை அவர்களது ஆப் ஸ்டோரில் டிக் டாக் செயலியை பயன்பாட்டில் தான் வைத்திருக்கிறார்கள். இது சம்மந்தப்பட்ட வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது, கிளிக் செய்து வீடியோவை பார்க்கலாம்.

#tiktokban #tiktokbannedinindia #googlebannedtiktok #tiktokbanned #tiktokapp