AD

அடுத்த சாதனையில் ரவுடி பேபி

தேர்தல் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் புதுப் படங்களின் டீசர், டிரைலர் வெளியீடு என அரசியல் வீடியோக்களுக்குப் போட்டியாக  சினிமா வீடியோக்களும் வந்தவண்ணமிருக்கின்றன.

பரபரப்பான புது வீடியோக்கள் ஏராளமாக வந்தாலும் சினிமா பாடல் ரசிகர்கள் இன்னும் 'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல்  பார்ப்பதை நிறுத்தவில்லை. 

இந்தப் பாடல் யு டியூபில் வெளியான நாளிலிருந்து அடுத்தடுத்து பெரும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

அதன் அடுத்த சாதனையாக விரைவில் 40 கோடி பார்வைகளை இந்தப் பாடல் தொட உள்ளது. தற்போது 39 கோடியே 80 இலட்சம் பார்வைகளைக் கடந்துள்ள இந்தப் பாடல் அடுத்த சில தினங்களில் 20 லட்சம் பார்வைகளை எளிதாகக் கடந்து 40 கோடி சாதனையைப் புரிந்துவிடும். 

அப்படி ஒரு சாதனை நிகழவிருப்பது தமிழ் சினிமா பாடலுக்கான தனிப்பெரும் நிகழ்வாகவே இருக்கும்.


#Sai_Pallavi, #Dhanush, #Maari, #Rowdy_Baby, #tamilcinemaking