AD

99 ஆகும் 96

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த '96' படம், பெரிய வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தப்படம் தற்போது '99' என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் ஆகி உள்ளது. ப்ரீத்தம் குப்பி இயக்கத்தில் கணேஷ், பாவனா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

படத்தின் டிரைலரை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள். வெளியான சில மணி நேரங்களில் 96 படத்தையும் 99 படத்தையும் சேர்த்து,   பல மீம்ஸ்கள் வெளிவந்தன. அதில் பல மீம்ஸ்கள் 99 படத்தை கிண்டலடித்த மீம்ஸ்களாக இருந்துள்ளது.

பல தமிழ்த் திரைப் பிரபலங்களும் இப்படி படத்தைக் கிண்டலடிப்பது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். 

தமிழைப் போலவே கன்னடத்திலும் இப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


#Vijay_Sethupathi, #Bhavana, #Trisha, #tamilcinemaking