AD

7 ஆண்டுகளுக்கு பின்பு சாட்டை

சாட்டை படத்தின் 2ம் பாகம், தற்போது தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்கு சாட்டை 2 என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. 

7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற இந்தப் படத்துக்கு அடுத்த சாட்டை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அன்பழகனே இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

இதுவும் பள்ளியில் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றிய கதை அமைப்பைக் கொண்டது. முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி அதே ஆசிரியர் வேடத்தில் தொடருகிறார். 

அதுல்யா ரவி ஹீரோயினாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார்.  

இதன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.  இப்படம் மே மாதம் வெளிவரவிருக்கிறது.


#Athulya_Ravi, #Saattai, #Justin_Prabhakaran, #tamilcinemaking