AD

வைரலாகும் நடிகர் சிம்புவின் புகைப்படம்..!!!

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசனுக்கு திருமணம் இன்று சென்னையில் நடைபெற்று உள்ளது. தான் காதலித்த பெண் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், இவரும் கடந்த பிப்ரவரி மதம் 16 ம் தேதி அவரின் தந்தை முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். குறளரசன் - நபீலா அஹமத் ஆகியோரின் திருமணம் இன்று சென்னையில் அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. உடல் எடையை குறைக்க லண்டனுக்கு சென்ற நடிகர் சிம்பு தம்பியின் திருமணத்திற்க்காக நேற்று சென்னை திரும்பி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மிகவும் எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் வீட்டார் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறளரசன் - நபீலா அஹமத் வரவேற்பு வரும் 29ம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. திருமணத்தை சிம்பிளாக முடித்ததால், வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த உள்ளனர். உடல் எடையை குறைத்த சிம்பு, விரைவில் "மாநாடு"படத்தில் நடிக்க உள்ளார்.

#Silambarasan #Kuralarasan #Marriage #Tamilcinemaking